திருமணம் நடந்து 2 ஆண்டுகளில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு - பொதுமக்கள் அதிர்ச்சி
கும்பகோணம் அருகே திருமணம் நடந்து 2 ஆண்டுகளில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த சோனாலி என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி இரண்டாம் படித்து வந்தார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சக்திதாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்ட நிலையில் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதனிடையே கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சோனாலி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் தற்கொலை சம்பவத்தில் சோனாலியின் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.