மைத்துனரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த பெண் - தங்கைக்காக வெறிச்செயல்!
பெண் ஒருவர் மைத்துனரின் அந்தரங்க உறுப்பை சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
உத்தரப் பிரதேசம், மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசோரே. இவருக்கு உமேஷ் மற்றும் உதய் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், உமேஷ் தனது அறையில் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டு கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் புகாரின் பேரில் விரைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெண் வெறிச்செயல்
அதில் உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் சகோதரியை உமேஷ் காதலித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்ய உமேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உமேஷ் அந்த பெண்ணை விட்டு விலகி வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் மஞ்சு உமேஷின் அறைக்குள் நுழைந்து அவரது அந்தரங்க உறுப்புகளை துண்டித்துள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் மஞ்சுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், உமேஷ் குணமடைய 7 முதல் 8 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.