வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்த பெண்
மத்திய பிரதேசத்தில் வீடு புகுந்து வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள உமரிஹா எனும் கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட, மகனுடன் தனியாக இருந்துள்ளார். இதையறிந்து கொண்ட நபர் ஒருவர் சம்பவதினத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டுக்குள் புகுந்துள்ளார். திருடன் நுழைந்துவிட்டான் என கருதி, அச்சிறுவன் அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைக்கச் சென்றுள்ளார்.
அந்நேரம் பார்த்து குறித்த பெண்மணியை வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, பக்கத்தில் இருந்த அரிவாளை எடுத்து ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.
தொடர்ந்து அருகிலிருந்த காவல்நிலையத்துக்கு சென்று புகாரும் கொடுத்துள்ளார், இதனையடுத்து அந்த நபரை மீட்ட போலீஸ் அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீதும், அந்த நபர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடந்து வருகிறது.