எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வெச்ச ஆண்டவா? - நடுவானில் கதறிய இளம்பெண்

viralvideo paragliding
By Petchi Avudaiappan Jan 18, 2022 08:37 PM GMT
Report

நடுவானில் பாராகிளைடிங் செய்த பெண் ஒருவரின் கதறல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாராகிளைடிங் செய்யும் நபர்களின் வீடியோக்கள் சமீபகாலமாக இணையத்தில் அதிக பேரால் ரசித்துப் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த பாராகிளைடிங் சாகசம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாராகிளைடிங் என்பது நடுவானில் பாராசூட் உதவியுடன் பறந்து செல்வது போன்ற ஒன்றாகும்.

குறிப்பாக புதிதாக திருமணமாகி பல இடங்களில் சுற்றுலா செல்லும் தம்பதிகள் அதிகம் பேர் இந்த சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்படியான பாரா கிளைடிங் செய்யும் போது இளம்பெண் ஒருவர் கத்தி கூச்சல் போட்டி கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கணவரின் விருப்பத்தின் பெயரில் பாராகிளைடிங் அனுபவத்திற்காக சென்ற அந்த பெண் பறக்க ஆரம்பித்தது முதலே கத்திக் கூச்சல் போடத் தொடங்கியுள்ளார். அவரை சமாதானம் செய்ய வேண்டி பின்னால் இருந்த பயிற்சியாளர் பல்வேறு வகையில் ஆறுதல் கூற முயற்சி செய்தார். இருந்த போதும், அந்த பெண் சமாதானம் அடையவில்லை. ஒவ்வொரு நொடியும், கதறி அழும் அந்த பெண் கீழே பார்க்க பயமாக உள்ளதாக கூறுகிறார். 

இதற்கு நடுவே தன்னை அழைத்து வந்த கணவரைக் குறித்தும், தனக்கு ஏன் கல்யாணம் நடந்தது என்றும் ஆண்டவனிடம் பயத்தில் முறையிடுகிறார். இறுதியில் அந்த பயிற்சியாளர் 'உங்களின் வீடியோ வைரலாக போகிறது' என தெரிவிக்க, இதனைக் கேட்டதும், ஒரு நொடி சிரித்த அந்த பெண், மீண்டும் சத்தமாக அலற ஆரம்பிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.