சில்லறை பிரச்சனை.., ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி

Telangana
By Yashini Nov 05, 2026 05:31 AM GMT
Report

woman conductor dies pushed off bus in telangana- தெலங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் நடத்துநர் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்சனை

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் அஸ்வாபுரம் பகுதியில் அக்டோபர் 25ஆம் தேதி, அரசுப் பேருந்தில் பெண் ஒருவர் தனது மகனுடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது, சிறுவனுக்கு பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி அவர் மறுத்துள்ளார். இதனால், பெண் பயணிக்கும் நடத்துநர் குண்ட்லா பிரவல்லிகாவுக்கும் (24) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சில்லறை பிரச்சனை.., ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி | Woman Conductor Dies Pushed Off Bus In Telangana

பின்னர், அந்த பெண் ரூ.100 கொடுத்து மகனுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்துள்ளார். ஆனால், சில்லறை கொடுப்பது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பெண், ஓடும் பேருந்தில் இருந்து நடத்துநர் பிரவல்லிகாவை கீழே தள்ளியுள்ளார். 

பெண் நடத்துநர் பலி

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் நடத்துனரின் காலில், பேருந்தின் பின்சக்கரம் ஏறியதால் பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அந்த பெண் பயணி மீது தற்போது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடத்துநர் பிரவல்லிகாவின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபாகர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவரது தாயாருக்கு வீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.