வீடியோ காலில் நிர்வாணமாக தோன்ற சொன்ன நபர் - இளம்பெண்ணுக்கு செல்போனால் நேர்ந்த கதி
ஆண் நண்பர் வெளிநாடு செல்ல கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் அவமானப்படுத்தப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவருக்கு மீனா என்ற மனைவியும், 2 மகன்,ஒரு மகள் உள்ளனர்.உள்ளுரில் சரிவர வருமானம் கிடைக்காத பாலசுப்ரமணியம் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
அங்கு சம்பாதித்த பணத்தை அவர் மீனாவிற்கு அனுப்பி வைத்தார். அதில் மீனா குழந்தைகள் நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார். இதனிடையே கணவருடன் பேசுவதற்காக வாங்கிய செல்போனில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசை ஏற்பட, எனக்கும் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வை என மீனாவை கட்டாயப்படுத்தவே வேறு வழியின்றி கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சுரேசை மீனா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டிற்கு சென்ற சுரேஷுடன் ஆரம்பத்தில் பேசிய மீனா அவருடனான தொடர்பை துண்டிக்கும் வகையில் நடந்து கொண்டார்.இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ் உனக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளது? அதனால் என்னை வெறுத்து பேசுகிறாயா? என கூறவே நன்றி மறந்து விட்டு அநியாயமாக பேசுகிறாயே என பொங்கிய மீனா, ஒரு கட்டத்தில் தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வசூலிக்க முடிவெடுத்து சுரேஷின் பெற்றோர் வீட்டிற்கு சென்று சுரேஷ் வெளிநாடு செல்ல தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
ஆனால் சுரேஷ் குடும்பத்தினரோ மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர். இதனால் அவமானம் தாங்காத மீனா தனது வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனா தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் உடனடியாக வர முடியாத நிலையில் மீனாவின் உறவினர்கள் கூடிப்பேசி மீனாவின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர்.
ஆனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரால் எழுந்த பிரச்சனை காரணமாகவே மீனா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் உறவினர் மத்தியில் பரவியது. இதனையடுத்து மீனாவின் உறவினர்கள் கடந்த மாதம் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார். கலங்கிய உள்ளத்தோடு என்ன செய்வது? என அறியாது வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.அப்போது மனைவி மீனா பயன்படுத்திய செல்போனை பார்த்த போது அதில் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன.
தினமும் இரவு நேரத்தில் வெளிநாட்டில் இருந்த சுரேஷ் மீனாவை மிரட்டி நிர்வாணமாக நின்று வீடியோ கால் பேச கட்டாயப்படுத்தியதை அறிந்துகொண்டார்.
அப்படி மிரட்டிய வீடியோவில் இருவரும் நிர்வாண நிலையில் இந்த வீடியோக்கள் மீனா செல்போனில் இருந்தது அவரை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் மீனா தற்கொலை செய்வதற்கு முன்பு சுரேஷ் வீட்டிற்கு பணம் வாங்க சென்றபோது நடந்த விவகாரத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவிற்கு சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் பொறுப்பு என பேசிய வீடியோ அதில் இருந்தது.
இந்த வீடியோக்களை பார்த்த பாலசுப்ரமணியம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் புகாராக எழுதி லால்குடி டிஎஸ்பி யிடம் புகார் அளித்ததன் பேரில் கடந்த 22ஆம் தேதி வெளிநாட்டில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது, செல்போன் மூலம் ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.