இறந்த கணவரின் உடலுக்கு முத்தமிட்ட மனைவி மரணம்
கேரளாவில் இறந்த கணவரின் உடலுக்கு கடைசியாக முத்தமிட்ட மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் புதன்பள்ளிக்குனனு பகுதியை சேர்ந்தவர் சூரியன் ஜோசப்(வயது 73), இவரது மனைவி ஷெர்லி(வயது 21), இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
கடந்த 15ம் தேதி வயது முதிர்வு காரணமாக சூரியன் ஜோசப் உயிரிழந்தார், கணவரின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போனார் ஷெர்லி.
தொடர்ந்து சூரியன் ஜோசப்புக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று இறுதியாக தேவாலயத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தன.

அப்போது இறுதியாக தனது கணவருக்கு முத்தமிட்டார் ஷெர்லி, முத்தமிடுவதற்காக குனிந்த ஷெர்லி எழுந்திருக்கவில்லை, இதனை கவனித்த உறவினர்கள் அவரை தூக்க முயன்ற போது எந்த வித அசைவும் இல்லை.
இதனால் பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துசென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், இதனையடுத்து இருவருக்கும் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டனர்.