பெண்ணின் வாழ்வில் விளையாடிய காட்டுத்தீ - கலிபோர்னியாவில் சோகம்
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்று பெண் ஒருவரின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சாஸ்தா கவுன்டியில் உள்ள 9,850 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியிருக்கிறது.
அங்கிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் கொடுக்க அங்கு வந்த காவல்துறை இந்த திடீர் காட்டுத்தீக்கு என்ன காரணம் என விசாரணை நடத்தியுள்ளது
. அப்போது மலைப்பகுதியில் அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா என்ற பெண் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு தவித்து வருவது தெரிய வந்தது. உடனே அவரை மீட்ட தீயணைப்புத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனையடுத்து காவல்துறை அவரிடம் நடத்தி விசாரணையில் பட்டர் ஃப்ளை எஃபெக்ட் அவர் விதியில் விளையாடியது வெளிச்சமானது.

அதாவது அந்த பெண் அளித்த தகவலில் மலையேறும் போது தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு விட்டது. தண்ணீர் தேடி அலைந்தேன். அப்போது குட்டையில் கரடியின் சிறுநீர் கலந்திருந்ததைக்கண்டேன். அதை வடிகட்ட டீ பேக்கை எடுத்தேன்.
மேலும் அதை சூடுபடுத்தி குடிக்கலாம் என சூடுபடுத்த நினைத்தேன். ஆனால் என்னுடைய அந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆகவே நான் அந்த தண்ணீரையே குடித்துவிட்டு மலையேற தொடங்கினேன்'' என்றார்.
அவருடைய சட்டப்பையிலிருந்து லைட்டர் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த காட்டுத்தீக்கு அந்த பெண் தான் காரணம் என்று கூறி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.