மலையேற சென்ற பெண்...500 நாட்கள் பூமிக்கடியில் உள்ள குகைக்குள் குளிக்காமல் தனிமையில் வாழ்க்கை..!
ஸ்பெயினில் மலையேற சென்ற பெண் பூமிக்கடியில் உள்ள குகையில் 500 நாட்கள் தனிமையில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் வெளியே வந்தார்.
500 நாட்கள் குகையில் வாழ்க்கை
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி 50 வயதான பீட்ரிஸ் ஃபிளாமினி, வெறும் ஆயிரம் லிட்டர் குடிநீருடன், கிரானாடா மலைப்பகுதியின் அருகே பூமிக்கடியில் உள்ள குகைக்குள் சென்றுள்ளார்.

230 அடி ஆழத்தில் வசித்து வந்த ஃபிளாமினி, கோ புரோ கேமராக்கள் மூலம் தனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்துவந்துள்ளார். மேலும் புத்தக வாசிப்பு, ஓவியம் தீட்டுதல், உடற்பயிற்சி என பொழுது போக்கியுள்ளார்.
அவருடன் எவ்வித பேச்சு தொடர்பும் வைக்காதபடி அவரது நடவடிக்கைகளை உளவியாளர்கள் லைவ் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

500 நாட்களுக்கு பின் வெளியே வந்த ஃபிளாமினி முதல் வேலையாக குளிக்கப்போவதாக தெரிவித்தார்.