கணவருக்கு கோவில் கட்டி தெய்வமாய் கும்பிடும் மனைவி: நெகிழ வைக்கும் சம்பவம்
இந்தியாவில் இறந்து போன கணவருக்கு கோவில் கட்டி மனைவி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் அங்கிரெட்டி- பத்மாவதி.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிரெட்டி விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரை இழந்து தவித்த பத்மாவதி, கணவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.
இதற்கிடையே அங்கிரெட்டியும், தனக்கு கோவில் கட்டும்படி பத்மாவதியிடம் கூறியதால், கோவிலை கட்டி அதில் தன்னுடைய கணவரின் பலிங்கு உருவ சிலையை நிறுவியுள்ளார்.
கணவர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
கோவில் கட்டி வெறும் வழிபாடு மட்டும் நடத்துவதோடு நின்றுவிடாமல் பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் பத்மாவதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.