ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்த பெண் - மோட்டார் சைக்கிளின் சத்தத்தை விட அதிகமாம்!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஏப்பம் விட்டு சாதனை
உலகில் உள்ள மக்கள் ஏப்பம் விடும் பழக்கத்தால் வெட்கப்படுவார்களா. ஆனால் ஒரு பெண் அதை சாதனையாக மாற்றியுள்ளார் . அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த கிம்பர்லி வின்டர் (Kimberly Winter) என்ற பெண் சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் இத்தாலி நாட்டை சேர்ந்த எலிசா கெக்னோனி (Elisa Cagnoni) என்ற பெண் கடந்த 2009ல் அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார். தற்போது கிம்பர்லி அதிக சத்தத்துடன், அதாவது ஒரு மோட்டார் சைக்கிள் சத்தத்தை விட அதிகமான சத்தத்துடன் ஏப்பம் விட்டு அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்காக அவர் சாதனை படைக்க தயாராவதற்கு முன்னர் காலை உணவுக்குப் பிறகு காப்பியும், பீரும் அருந்தியுள்ளார்.
கிம்பர்லி பேச்சு
இதுகுறித்து பேசிய கிம்பர்லி 'சத்தமாக ஏப்பம் விடும் தண்மையைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்ததாகவும், வயது ஆக ஆக சத்தம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். கிம்பர்லி ஏப்பம் விடும் காணொளிகளை TikTok, Facebook போன்ற தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது . கின்னஸ் உலக சாதனைப் படைக்க ஊக்கமளித்ததே எனது ரசிகர்கள்தான் என்று கிம்பர்லி தெரிவித்துள்ளார்.