ரத்து செய்யப்பட்ட விமானம்... பெண்ணுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்..!

america florida lottery ticket
By Petchi Avudaiappan Aug 07, 2021 05:00 PM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால்  பெண்ணுக்கு கோடிக்கணக்கில் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

விமானத்திற்கும் லாட்டரிக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கிறீர்களா?. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் மிசோரி கன்சாஸ் சிட்டியைச் சேர்ந்த ஏஞ்சலா கேரவெல்லா என்ற 51 வயதுப் பெண் விமானப் பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கேரவெல்லா அடுத்த விமானம் வரும் வரை அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அவர் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க விரும்பினார். இதில் ஒரு லாட்டரிக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.44 கோடியாகும். அவருக்கு எல்லாம் போக கையில் ரூ.5.88 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனைக் கேட்டு கேரவெல்லா இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.