சாலையில் வீசப்பட்ட உடல் பாகங்கள்; தலை கிடைக்கல.. பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
பெண்ணின் உடல் பாகங்கள், சாலையில் வீசப்பட்டுக் கிடந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சாலையில் உடல் பாகங்கள்
கர்நாடகா, சிம்புகானஹள்ளி கிராமத்தில், விவசாயி ஒருவர் வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிளாஸ்டிக் கவரில் மனிதனின் கை வீசப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விரைந்த அவர்கள் கையை கைப்பற்றி சுற்றுப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
தீவிர விசாரணை
தொடர்ந்து அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் மற்றொரு கை, வயிற்று பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தலை மற்றும் கால் கிடைக்கவில்லை.
முதற்கட்ட விசாரணையில் கையில் உள்ள டாட்டூவை வைத்து பெண்ணின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். இதை செய்தவர்களை கண்டுபிடிக்க,
போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.