அத்துமீறிய திருடனின் கைவிரலை கடித்து துண்டாக்கிய பெண்!

Uttar Pradesh Crime
By Sumathi 1 மாதம் முன்

பெண் ஒருவர் அத்துமீறிய திருடனின் கைவிரலை கடித்து துப்பியுள்ளார்.

அத்துமீறல்

உத்தரப்பிரதேசம், கவுசாம்பி காவல் நிலையத்திற்கு துண்டிக்கப்பட்ட கை விரலோடு பெண் ஒருவர் வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண்ணின் பெயர் நீட்டா தேவி. மயோஹார் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

அத்துமீறிய திருடனின் கைவிரலை கடித்து துண்டாக்கிய பெண்! | Woman Bites And Cuts Off A Mans Finger Up

சம்பவத்தன்று சந்தைக்கு சென்று காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வீடு திரும்பியுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர் ஒருவர் பெண்ணை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஜெயின், கையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றுள்ளார்.

 பெண் துணிகரம்

மேலும் அவரிடம் அத்துமீறியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் கத்தியதால் அவரது வாயை கைவைத்து அந்த நபர் அடைத்துள்ளார். அப்போது அந்த பெண் நபரின் கை விரலை ஆவேசமாக கடித்துள்ளார். நபரின் விரல் துண்டாகி கீழே விழுந்துள்ளது.

அதனையடுத்து மக்கள் அங்கு திரண்டதால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண்ணின் தற்காப்பு வீரத்தையும் போலீஸார் பாராட்டியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.