கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவன் - தலையை வெட்டி போலீசிடம் சென்ற மனைவி

andhrapradesh husbandkilledbywife
By Petchi Avudaiappan Jan 20, 2022 05:07 PM GMT
Report

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு மனைவி கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவை சேர்ந்த ரவிசந்த்சூரி - வசுந்தரா தம்பதியினருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்  மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் உள்ளார். இதனிடையே கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த மனைவி வசுந்தரா கணவரிடம் இதுபற்றி கேட்டு அவரை கண்டித்துள்ளார். 

இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று கணவனின் கள்ளதொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்ற வசுந்தரா, கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார்.

பின்னர் கணவனின் தலையை கையில் எடுத்து பையில் போட்டு எடுத்து கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார். கணவனின் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர். இதனால் அவரது மனநிலை சரியில்லாத மகன் நிற்கதியாகி உள்ளார்.