ஒண்டர்வுமன் தங்கச்சி போல : கையில் குழந்தை. காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்

3 நாட்கள் முன்

பெண் ஒருவர், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு காலால் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள சிறிய அறையின் கதவை மூடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று, ஃபிகென் என்ற ட்விட்டர்வாசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், விமானத்தில் உள்ள மேல்நிலை கேபினை பெண் தனது காலால் மூடும் காட்சி பதிவுசெய்யப்படுள்ளது.

அந்த வீடியோவை பார்க்கும்போது, அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க தயாராகி வருவதையும், கையில் குழந்தையும் உள்ளது . ஒரு கையில் குழந்தையை பிடித்துள்ள அவர், மற்றொரு கையில் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள அவரது உடமையைகளை தூக்குகிறார்.

மற்றவர்கள் உதவ நினைப்பதற்குள் தனது உடலை ஜிம்னாஸ்டிக்கு செய்வதை போல வலது காலைத் தூக்கி மேல் உள்ள கேபினின் கதவை அவர் காலால் மூடுகிறார். மற்றவர் உதவியை எதிர்பார்க்காத அந்த பெண்ணின், இந்த சிறிய ஸ்டண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.