Wrong Route'ல் வந்து பேருந்து ஓட்டுநரை அடித்த பெண்
விஜயவாடாவில் பைக் மீது அரசு பேருந்து மோதியதால் ஆத்திரம் அடைந்த பெண் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் போக்குவரத்து விதிகளை மீறி ராங்க் ரூட்டில் வந்த பெண் ஒருவர் எதிரே வந்த அரசு பேருந்து தன் பைக் மீது லேசாக மோதியதை கண்டித்து பேருந்து ஒட்டுநரை சட்டையை பிடித்து தாக்கினார்.
தகாத வார்த்தைகளால் ஓட்டுநரை வசைப்பாடிய அந்த பெண் ஓட்டுநரை எட்டி உதைத்தும் கன்னத்தில் அறைந்தும் தாக்கத் தொடங்கினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநரை தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநரை பெண் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.