‘கணவரை ஓட ஓட அடித்து கொடுமை படுத்தும் மனைவி’ - வீடியோவை காண்பித்து நீதிமன்றத்தில் கணவன் உதவி கேட்ட பரிதாபம்!

Rajasthan
By Swetha Subash May 27, 2022 11:01 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வருபவர் அஜித்சிங். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

ஆசிரியர் அஜித்சிங் அதே பகுதியை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தான் தன் காதல் மனைவியின் சுயரூபம் பற்றி அஜித்சிங்கிற்கு தெரியவந்துள்ளது.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதிகமாக கோபப்பட்டு தன்னை தாக்கும் மனையின் குணத்தை ஆரம்பத்தில் கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளார் அஜித்சிங்.

ஆனால் நாளுக்கு நாள் மனைவியின் போக்கு கட்டுப்படுத்தமுடியாமல் சென்றுள்ளது. கோபம் வந்தால் கையில் கிடைக்கும் அனைத்தும் எடுத்து அஜித்சிங் மீது எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார் சுமன்.

இவ்வாறு அவர் அஜித்தை தாக்கும்போது கதவை தாழிட்டுவிடுவாராம், அதனால் அஜித்தால் வேறெங்கும் தப்பிக்க முடியாத சூழலில் வீட்டுக்குள்ளேயே ஓட ஓட விரட்டி விரட்டி தாருமாராக கட்டையாலும், கரண்டியாலும், கிரிக்கெட் மட்டையாலும், சப்பாத்தி கட்டை என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களைக்கொண்டும் காதல் கணவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் சுமன்.

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒவ்வொரு நாளும் மனைவியிடம் அடி வாங்கிய அஜித்சிங் இது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். அவர் போலிசில் புகார் தெரிவித்தற்கும் மனைவியிடம் இருந்து அடி கிடைத்துள்ளது.

அடி தாங்க முடியாமல் மற்றவரின் உதவியை நாட கையில் ஆதாரம் வேண்டும் என்பதற்காக, மனைவி கையால் தான் அடி வாங்குவதை ரெகார்ட் செய்ய முடிவெடுத்து அஜித்சிங் வீட்டினுள் கேமராவை பொறுத்தியுள்ளார்.

கேமராவில் அவர் சுமன் கையால் அடி வாங்குவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோர்ட்டில் சமர்ப்பித்து அஜித்சிங் மனு ஒன்றை தாக்கல் செய்து, “மனைவியின் அடி தாங்க முடியவில்லை. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.

அஜித்சிங் அடி வாங்கும் வீடியோக்களை பார்த்த நீதிபதி, அவரை பார்த்து இவ்வளவு அடி வாங்குகிறீர்களே, ஏன் திருப்பி அடிக்கவில்லை? என்று கேட்டனர்.

‘கணவரை ஓட ஓட  அடித்து கொடுமை படுத்தும் மனைவி’ - வீடியோவை காண்பித்து நீதிமன்றத்தில் கணவன் உதவி கேட்ட பரிதாபம்! | Woman Attackes Husband Mercilessely Security Given

அதற்கு பதிலளித்த அஜித்சிங், காதலித்து திருமணம் செய்த மனைவியை எனக்கு அடிக்க தோன்றவில்லை, நான் ஒரு தலைமை ஆசிரியர். கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மனைவியின் அடி - உதை சித்ரவதைகளை பொறுத்துக் கொண்டேன்.

இது நாள் வரை என் மனைவி என்னை எத்தனையோ முறை தாக்கி இருக்கிறார். ஆனால் அவரை அடிப்பதற்காக எனது விரல் கூட அவள் மீது பட்டதில்லை என தெரிவித்தார். அஜித்சிங்கின் நிலைமையை புரிந்து கொண்ட நீதிபதி அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.