அரைகுறை ஆடையுடன் தெருவில் இளம்பெண் - அட்வைஸ் செய்த போலீஸூக்கு கொடூரம்

Bengaluru Crime
By Sumathi Jan 13, 2026 08:07 AM GMT
Report

அறிவுரை வழங்கிய பெண் காவலர் தாக்கப்பட்டுள்ளார்.

பெண் காவலர் அட்வைஸ்

பெங்களூரு, கே.ஆர். புரம் ரெயில்வே நிலையம் பகுதியருகே தாமினி என்ற மோகினி (வயது 31) என்பவர் தெருவில் அரைகுறை ஆடையுடன் நடந்து சென்றார்.

அரைகுறை ஆடையுடன் தெருவில் இளம்பெண் - அட்வைஸ் செய்த போலீஸூக்கு கொடூரம் | Woman Assaulting Home Guard Bengaluru

அவரை இளைஞர்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனால், எதனையும் கண்டு கொள்ளாமல் தெருவின் நடுவில் நடந்து கொண்டே சென்றார்.

இளம்பெண் வெறிச்செயல்

அந்த சமயத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர் அவரிடம், இதுபோன்று ஆடைகளை அணிந்து தெருவில் நடந்து போக வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் வாகனங்கள் வருவதால் சற்று ஓரத்தில் செல்லும்படி கூறியுள்ளார்.

பெண் கண்டெக்டரை அறைந்த ஆண் பயணி - என்ன நடந்தது?

பெண் கண்டெக்டரை அறைந்த ஆண் பயணி - என்ன நடந்தது?

ஆனால், இதனால் ஆத்திரமடைந்த மோகினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து அவருடைய முடியை பிடித்து, இழுத்து, கீழே தள்ளி கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் லட்சுமியின் முகம், மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய மோகினிக்கு எதிராக லட்சுமி அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய போலீசார் மோகினியை கைது செய்துள்ளனர்.