ஏ எப்புர்ரா..கணவனை விவாகரத்து செய்யலாமா - AI சொன்ன ஸ்மார்ட் பதில்!
ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் கூறியுள்ள பதில் ஒன்று வைரலாகி வருகிறது.
விவாகரத்து
சாரா(37) எனும் பெண் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.6 மாதங்களாக இவர் மற்றொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.சாராவின் கணவருக்கு இது தெரிய வந்து, இதனால் தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று இருவரும் முடிவு செய்திருந்தனர். தொடர்ந்து, சாரா தன்னுடைய சூழ்நிலையை விவரித்து ChatGPTஇடம் ஒரு கதை எழுதுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
AI பதில்
அதில், அழகான ஒரு தீர்வுடன் செயற்கை நுண்ணறிவு எழுதிய கதை சாரா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு உதவியிருக்கிறது. சாராவுக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும் என்றும்,
அவருடைய மகிழ்ச்சிக்காக அவருடைய கணவரை பிரியலாம் என்று தீர்வு சொல்லி இருக்கிறது. இதைத்தான் சாராவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் சுவாரஸ்யமான விஷயம், ஆய்வின் அடிப்படையில் தீர்வு வழங்கியுள்ளது தான்.