காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று சமையலறையில் புதைத்த பெண் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாகிசர் பகுதியில் ஷாஹீத் ஷேக் என்பவர் தனது மனைவி ரஷீதா ஷேக் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மே 21ம் தேதி வேலைக்கு சென்ற தனது கணவர் ஷாஹீத் வீடு திரும்பவில்லை என ரஷீதா ஷேக் போலீசிடம் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யபட்டு போலீசார் விசாரணையை துவக்கினர்.
விசாரணை முடிவில், ரஷீதா ஷேக் தனது ஆண் நண்பருடன் இணைந்து கணவர் ஷாஹீத் ஷேக்கை கொலை செய்தது வீட்டின் சமையலறையில் புதைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.
சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ரஷீதா ஷேக்கை கைது செய்ததுடன் அவரது ஆண் நண்பரை தேடி வருகின்றனர்