இளைஞருடன் உல்லாசம்.. நிர்வாண வீடியோ எடுத்த இளம்பெண்- கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
இளைஞருடன் தனிமையில் இருந்து நிர்வாண வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டையை சேர்ந்த சூசையம்மாள் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நளினி (32) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அந்த நேரத்தில், திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டையில் வசித்து வரும் மாதேஸ்வரன் (50) என்பவரது தாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரை கவனித்து கொள்ள நளினி கடந்த சில நாட்களுகு முன் மாதேஸ்வரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.அப்படி சம்பவத்தன்று மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி அதனை வீடியோ எடுத்துள்ளார்.பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
நிர்வாண வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரன் 2.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்ததால்மாதேஸ்வரன்.செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அதன்பின்னர் நளினி ஆட்களை அனுப்பி பணம் செய்து தொல்லை செய்துள்ளார்.
இதனையடுத்து மாதேஸ்வரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நளினி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.