4 பேருடன் தகாத உறவு; கண்டித்த கணவனை காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!

Attempted Murder Uttar Pradesh Crime
By Sumathi Apr 18, 2023 04:48 AM GMT
Report

கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து மனைவி, கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

உத்தரப் பிரதேசம், ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவா(28). சிவாவுக்கு மதூரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

4 பேருடன் தகாத உறவு; கண்டித்த கணவனை காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி! | Woman Along With His Four Lovers Murdering Husband

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய நான்கு நபர்களுடன் மனைவி மாதுரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதுகுறித்து, அறிந்த கணவர் சிவா, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார்.

கணவன் கொலை

தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சதித்திட்டம் தீட்டி கணவர் சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்துள்ளனர். அதில் போதை தலைக்கேறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் சிவாவின் சகோதரர் வினோத்திற்கு தெரியவந்துள்ளது.

அவர் போலீஸாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மனைவி மாதுரி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.