'லவ்வுல இதெல்லாம் சகஜம்’ - கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவி

england woman eat husband ashes
By Petchi Avudaiappan Oct 20, 2021 07:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உயிரிழந்த தனது கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த கேசி என்ற 26 வயது பெண்மணி கடந்த 2009 ஆம் ஆண்டு சீயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சீயன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தார். 

இதனால் மனவேதனைக்குள்ளான கேசி தான் செல்லும் இடமெல்லாம் கணவரின் அஸ்தியை எடுத்துச் செல்வதோடு, கணவரின் அஸ்தியை விரலால் தொட்டு சாப்பிட்டும் வருகிறார். இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். நாள் ஒன்றுக்கு தான் 5 முதல் 6 முறை அஸ்தியை சாப்பிடுவதாக கேசி கூறியுள்ளார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டு பலரும் இது தொடர்பாக அவரிடம் கேள்வியை முன்வைத்தனர். ஆனால், கணவரின் அஸ்தியை சாப்பிடும் பழக்கத்தை தன்னால் நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.