அரிய நோய் இருப்பதாக குழந்தையை சிகிச்சைக்கு கட்டாயப்படுத்திய தாய் - இறுதியில் நேர்ந்த விபரீதம்!
குழந்தையை தவறான சிகிச்சைக்கு உட்படுத்திய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
மன நோய்
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜெசிகா கேஸர் (27) என்றவர் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகத்தில் பிரபலமானவர். இவருக்கு 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது இவர் முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen syndrome by proxy) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி என்பது ஒரு அரிய உளவியல் நோயாகும். இது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது.
இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் பெரும்பாலும் தாய்மார்கள் போலியான நோய் அறிகுறிகள் தன் குழந்தைக்கு இருப்பதாகக் கூறி அந்த குழந்தை உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்கள். இதேபோலத்தான் ஜெசிகா கேஸர் தனது மகளுக்கு இல்லாத அரிய நோய்கள் இருக்கிறது என்று கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைகளுக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தாயார் கைது
இந்நிலையில் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகா கேஸரை போலீசார் கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் "இந்த சம்பவம் இந்த மன நோய்க்கான ஒரு சிறந்த உதாகரணம் ஆகும்.
இது தொடர்பாக நீங்கள் யாரேனும் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்டிருந்தால். மைக்கேல் வெபர் என்ற காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.