ஒரே ஒரு சிவப்பு சேலையால் 150 பேரின் உயிரை காப்பாற்றிய பாட்டி
சேலையை பயன்படுத்தி 150 பேரின் உயிரை காப்பாற்றிய 70 வயது பெண்ணின் வீரச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண், தனது புத்தி சாதூர்யத்தாலும் 150 ரயில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்று மூன்று வருடங்கள் ஆனாலும் விரைவாக முடிவெடுக்கும் திறன் தான் இவற்றிற்கு காரணமாக அமைந்துள்ளது.
70 வயதாகும் ஓம்வதி தேவி வழக்கம் போல் அன்றும் ரயில் தண்டவாளத்தின் அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அசாதாரணமாக ஒன்றை கவனித்துள்ளார்.
ரயிலை நிறுத்தினாரா?
ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதி உடைந்து, ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. சேதமடைந்த தண்டவாளத்தின் மீது ரயில் செல்லும் பொழுது பயங்கரமான விபத்து ஏற்படும் என்பதனை புரிந்து கொண்ட அந்த மூதாட்டி, சற்றும் யோசிக்காமல் தான் உடுத்தியிருந்த சிவப்பு நிற சேலையைக் கழற்றி ரயில் முன் அசைக்க ரயில் நின்றது.
தேவியின் இந்த செயலால் அன்றைய தினம் நடக்கவிருந்த விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த செய்தி இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மூதாட்டியின் வீரச் செயலை கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.