100 ஆண்டுகள் வாழனுமா; இதை மட்டும் செய்யாதீங்க - ரகசியம் சொன்ன 100வயது பெண்!
நீண்ட நாட்கள் வாழ்ந்ததற்கான ரகசியத்தை பாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுள்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆலிவ் வெஸ்டர்மேன்(100). இவர் நர்சரி பள்ளி செவிலியராக பணிபுரிந்தார். சமீபத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு தனது 100 வது பிறந்தநாளை உற்சாகமாக் கொண்டாடினார். அப்போது, டீவாட்டர் கிரேஞ்ச் குடியிருப்பு இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது,

"விசித்திரமான மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்க்கவும், அப்போது தான் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும். நான் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை, மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க வேண்டும், மேலும் உங்களிடம் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
வித்தியாச டிப்ஸ்
பல ஆண்டுகளாக நான் குழந்தைகளுடன் வேலை செய்வதில் நிறைய நேரம் செலவிட்டேன். உங்களை இளமையாக வைத்திருக்க இது நிச்சயமாக உதவிவும்! எனக்கு இப்போது 100 வயதாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

இவர் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை மறைந்த கணவர் சாமுடன் கழித்துள்ளார். பயண எழுத்தாளரான கணவருடன் பயணங்களில் தான் அதிக காலத்தை செலவளித்துள்ளார்.