சபரிமலை போறீங்களா? இது கட்டாயம் இல்லை - முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மிக பிரபலம். அந்த சமயத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை போட்டு கோவில் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நவம்பர் 15ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.
பதிவு கட்டாயம் இல்லை
மேலும், டிசம்பர் 26ல் மண்டல பூஜையும், ஜனவரி 14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், நடப்பு சீசனில் நேரடி முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, நேரடி தரிசன முன்பதிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என இந்து மத அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரள சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மகர விளக்கு சீசனில் ஆன்லைன் முன்பதிவு செய்யாதோரும் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.