காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கோ வே தங்கம் வால்பாறை தொகுதியில் தனித்து சுயேட்சையாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கோவே தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட போவதாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் பரபரப்பு பேட்டி .
கோவை இரயில் நிலையத்தில் உள்ள தனியார் உனவக அரங்கில் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைக்கு பல்வேறு முக்கியமான விஷயங்களை உங்களிடத்தில் பேச உங்களை எல்லாம் அழைத்ததாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தான் வால்பாறை சட்டமன்ற தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட போபதாவும் கட்சியை நம்பி என்னுடைய அரசியல் வாழ்க்கையை அழைகழித்துவிட்டனர், இதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே தான் விலகுவதாக தெரிவித்தார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டு, மக்களின் வாழ்க்கையை சீரளித்து வருகின்றதாகவும்,இதன் கூட்டனியில் வால்பாறை தொகுதியில் தான் போட்டியிட வில்லை என்பதை அறிந்த அந்த பகுதி மக்கள் கடும் வருத்தம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் 1980 ம் ஆண்டு வால்பாறை தொகுதியில், தனது 30வது வயதில் அன்னை இந்திரா காந்தி மூலமாக, வால்பாறையில் வாய்ப்பு தந்ததாகவும், மேலும் தனது சின்ன வயதில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினராக மூப்பனார் அவர்களால் நிறுத்த பட்டதாகவும், அந்த தருணத்தில் கோவையில் குண்டு வெடிப்பு காரணமாக தான் தோல்வி யுற்றதாகாவும், மீண்டும் 2002 ம் ஆண்டு மீண்டும் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், தான் வெற்றி பெற்ற பின்னரே வால்பாறை தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளதாகவும், தேயிலை தொழிலாளர்களின் சம்பள பணம் 72 ருபாயிலிருத்து 335 ருபாயாக உயர்த்தி தர பல்வேறு போராட்டங்களை தான் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
2021 ல் தனக்கு அந்த பகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வில்லை எனவும், காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து முதல் கூட்டணி மக்கள் நல கூட்டணியாக இணைந்துள்ள திமுக உடன் கூட்டணி வைத்து ஒரு சீட்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என தான் பலமுறை கட்சி மேலிடத்தில் பேசி வந்ததாகவும், தற்போழுது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது.
மேலும் கோவை தனக்கு தனது தொகுதியான வால்பாறை யை ஒதுக்காமல் சென்னையில் நிற்க கூறியதாகவும், இதனை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நான், தனது தாய் விடான வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக நிற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் ஒட்டுக்கு யாருக்கும் பணம் தரமாட்டேன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் மட்டுமே வெற்றி பெற்றால் நான் செய்வேன் என சூழுரைத்தபடி விடை பெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு மணிநேரம் பேட்டியளித்த பின்னர் தான் போட்டியிட வில்லை எனவும் நான் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது இரண்டு நாட்களில் தெரிவிக்க படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.