சிறு சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிக்கை வாபஸ்: நிர்மலா சீதாராமன் தகவல்

bank sitharaman loan nirmala
By Jon Apr 01, 2021 11:28 AM GMT
Report

சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதையடுத்து 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இதனால் (பிபிஎஃப்) வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான (என்எஸ்சி) வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 5.9 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது.

மத்திய அரசின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில், மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது திரும்பப் பெறப்படுவதாகவும். ஏற்கனவே 2020-2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.