ஒரு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai May 01, 2023 04:13 AM GMT
Report

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12 மணிநேரவேலை

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டம் மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனால் கொண்டுவரப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்களை அறிவித்த நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் திருத்தி நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனால் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவின் அடுத்தகட்டநிலை என்ன என்பது குறித்த கேள்வி வெகுவாக எழுந்தது.

ஒரு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Withdrawal 12 Hour Work Bill Cm Stalin

விரைவில் அறிக்கை

இந்த நிலையில் இன்று மே தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் , அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான் என கூறிய முதலமைச்சர் மசோதா வாபஸ் குறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எழுத்துப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும் என கூறினார்.