முறிந்த கூட்டணி...வெளிவந்த அதிமுக...யாருடன் கூட்டணி அமைக்கும் பாஜக..?

Amit Shah Shri Jagat Prakash Nadda BJP Narendra Modi K. Annamalai
By Karthick Sep 25, 2023 03:30 PM GMT
Report

 கூட்டணியை அதிமுக முறித்துள்ள நிலையில், தமிழகத்தில் எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது. 

அண்ணாமலையின் முடிவு

அதன் வெளிப்பாடே அவர் பொள்ளாச்சி என் மண் என் மக்கள் பாதயாத்திரையில், "அரசியல் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்பதால், சிலரை எதிர்த்து நிற்கும் காலம் இது என குறிப்பிட்டு, ஏனென்றால் தான் மாநில தலைவர் என்ற நம்பிகையை மக்களிடம் இழந்துவிட தயாராக இல்லை என தெரிவித்தார்.

with-which-parties-bjp-will-form-alliance

தான் சிலரை எதிர்க்க நிக்க தயாராகிவிட்டதாக கூறிய அண்ணாமலை, அதே போன்ற நிலைப்பாட்டையே பாஜகவும் எடுக்கும் என எதிர்பார்பதாக கூறினார். இதன் மூலம் அதிமுகவை தான் மறைமுகமாக அண்ணாமலை கூறுகிறார் என்ற கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

முடித்து வைத்த அதிமுக  

இந்நிலையில், தான் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

with-which-parties-bjp-will-form-alliance

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை அமைக்கவும் அக்கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜகவின் கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. தேமுதிக, பாமக அமமுக போன்ற கட்சிகளின் ஆதரவு ஓபிஎஸ் அணியின் ஆதரவு போன்றவை பாஜகவிற்கு ஆதரவான முடிவை எடுக்கலாம். ஆனால் அது வரும் நாட்களில் மட்டுமே வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை.