எனக்கு தெரிந்த எல்லா பெண்களுடனும் என் மாஜி கணவர் உறவு வைத்தார் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை
பாலிவுட் பிரபல நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியங்களை கூறுவார்கள்.
இந்நிலையில், ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்து இந்தி படங்களில் நடித்து வருபவர் மந்தனா கரிமி. இவர் ‘லாக் அப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் வாழ்க்கையில் ஏற்பட்ட சில ரகசியங்களை பற்றி கூறினார். அப்போது அவர் கூறுகையில், நான் தொழிலதிபர் கவுரவ் குப்தாவை இரண்டரை வருடங்களுக்கு முன்பு காதலித்தோம்.
இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், 8 மாதங்கள் கழித்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான 8 மாதங்களிலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரிய பிரச்சினை இருந்து வந்தது. இதனையடுத்து நாங்கள் 4 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தோம்.
பிரிந்து வாழ்ந்த அந்த 4 ஆண்டுகளில் என் மாஜி கணவர் கவுரவ் குப்தா எனக்கு தெரிந்த பல பெண்களிடம் அவர் உறவு கொண்டார்.
இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு தான் நான் சட்டப்பூர்வமாக கவுரவ் குப்தாவிடம் விவாகரத்து பெற்றேன் என்று மன வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.