உடல் எடை சீக்கிரமா குறையணுமா? - இந்த கீரையை சாப்பிடுங்க
wintergreens
weightlosstips
By Petchi Avudaiappan
3 years ago

Petchi Avudaiappan
in ஆரோக்கியம்
Report
Report this article
பொதுவாக பருவநிலை மாறும் போது நமது உடலின் அமைப்பும் மாறுவது வழக்கம். குறிப்பாக எடை அதிகரிப்பு தொடர்பான கவலை பலரையும் வாட்டி வதைக்கும்.
இதற்காக டயட் உணவு முறைகள், தீவிர உடற்பயிற்சி என நேரம் ஒதுக்கும் நாம் சரியான உணவுப்பொருட்களை நம்முடைய தினசரி உணவில் சேர்க்கிறோமா என்பதை பற்றி சிந்திப்பதே இல்லை. இந்தியாவில் தற்போது நிலவி வரும் குளிர்காலம் உடல் எடை அதிகரிப்பு வழிவகுப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் உள்ள நிலையில் எடை இழப்புக்கு பெரிதும் உதவும் சில குளிர்கால கீரை வகைகள் பற்றி காணலாம்.
- மேத்தி என்று அழைக்கப்படும் வெந்தயகீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதோடு வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும் வெந்தயத்தின் புதிய இலைகளில் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளது. இது நீரிழிவு அபாயத்தை குறைத்து எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.
- முள்ளங்கி இலைகளின் பயன்பாடு குறைவாக இருந்தாலும் முள்ளங்கியுடன் ஒப்பிடும்போது இவை சத்தானது மற்றும் சுவையானவை. முள்ளங்கி இலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது.
- பாசிப்பருப்பு, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் வறுத்த கடுகு இலைகளின் கடுமையான வாசனை குளிர்காலத்தில் பல வீடுகளில் பிரதான உணவாகும். இவை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த குறைந்த கலோரி இலைகள் எடை இழப்புக்கு உதவுகிறது.
- இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றான கீரைகள் பல்வேறு வகைகளில் உண்ணப்படுகிறது. இதில் பசலைக்கீரை மிக முக்கியமானது. இது கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. இவை மலச்சிக்கல், எடை குறைப்பு, கால் மூட்டுகளில் ஏற்படும் வாதம், முகப்பரு, உடல் சூடு, அஜீரண கோளாறு, ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண் போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது.
You May Like This