ஓ.. இதுக்கு பேருதான் சந்தோஷத்துல சட்டைய கிழிக்கிறதா? - வைரலாகும் புகைப்படம்
சிலமனிதர்கள் மகிழ்ச்சியான செய்தியினை கேட்கும் போது சந்தோஷ மிகுதியில் தன்னையே மறந்து விடுவார்கள் அந்த வகையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து நார்வே வீரர் கார்ஸ்டன் உற்சாக மிகுதியில் தான் அணிந்திருந்த சட்டையை கிழித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பிரிவுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 45.94 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தார்.

அப்போது வெற்றிக் கோட்டை அடையும்போது சந்தோஷ மிகுதியில் தனது மேல் சட்டையை கிழித்து கூச்சலிட்டார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 46.17 வினாடிகளில் கடந்து அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் பிரேசில் வீரர் அலிசன் சாண்டோஸ் பந்தய தூரத்தை 46.72 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
உலக பெண் குழந்தைகள் தினத்தில், சுனிதா வில்லியம்ஸின் சாதனையும் சமர்அழகியின் உயிர்மாய்ப்பும்…. IBC Tamil
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil