மதுபானக்கடைகளுக்கு மீண்டும் டோக்கன் முறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
மதுபானக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவிவருவ்தால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது.
மேலும்,பொதுமக்கள் கூடும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய விதிமுறைகளில் மதுபானக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.