மதுக்கடைகளை திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவது ஏன்? - சீமான் கண்டனம்!
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உச்சத்திலிருக்கும் சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவது ஏன் என நாம் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வில் எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்ததால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திவிட்டு, இப்போது மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சமாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவலால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்களைத் தினந்தோறும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிற பேரிடர் மிகுந்த தற்காலச்சூழலில் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவெடுத்திருக்கும் தமிழக அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது என்றும் நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராத இக்கட்டான நிலையில் மக்களின் நலனைத் துளியும் சிந்திக்காது அவசரகதியில் மதுபானக்கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் உச்சத்திலிருக்கும் கொடுஞ்சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவதா?https://t.co/xZy3dTY8W1 pic.twitter.com/HkEUWWQ0GN
— சீமான் (@SeemanOfficial) June 13, 2021
ஆகவே, நாடெங்கிலும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, மக்களின் நலனை மனதில் வைத்து கடந்த காலப்படிப்பினைகளை முன்மாதிரியாகக் கொண்டு, மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தல்