மது பிரியர்களின் கவனத்திற்கு, 10 நிமிடத்தில் டோர் டெலிவரி : எங்கே தெரியுமா?
கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்கிறது ஒரு நிறுவனம்.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், மதுபானத்தை எளிதாக அணுகும் வகையில் உதவ வந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கு, தங்கள் வீட்டு வாசலில் மதுவை டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியுள்ளது.
மதுபான விநியோகம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மட்டும் சரியாக இருக்காது என்றும் ஆனால் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Innovent Technologies Private Limited-இன் முதன்மை பிராண்டான ,இது இந்தியாவின் முதல் 10 நிமிட மதுபான விநியோக தளம் என்று கூறியுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, மதுபான விநியோகம் அதிவேகமாக இருக்கும், ஆனால் கொல்கத்தாவில் உள்ள மக்களுக்கு மலிவு விலையிலும் இருக்கும் என்றும் சந்தையில் நுகர்வோர் தேவை மற்றும் தற்போதைய விநியோகத்தில் உள்ள பற்றாக்குறையை குறைக்க மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே, கொல்கத்தாவில் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஆர்வமுள்ளவர்கள் Booozie-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்றும் 10 நிமிடங்களில் மதுபானம் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.