மச்சி ஓபன் தி பாட்டில்.. டாஸ்மாக் கடையில் ஒயின்குடித்த எலிகள்!
ஊரடங்கு தளர்வினால் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் எலிகள் ஒயினை குடித்சம்பவம் அரேங்கேறியுள்ளது.
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம்.
உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. அதே சமயம் எலிகள் சில சமயம் தனது சேட்டைகளால் மனித குலத்துக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தான் , நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியாநந்தன் ஆகியோர் திறந்தனர்.
அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தி இருந்ததுடன், அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையில் நடந்தது என்ன என்பது குறித்து ஊழியர்கள் சோதனை செய்தபோது எலிகள் பாட்டில்களை கீழே தள்ளி, மூடிகளை சேதப்படுத்தி அதிலிருந்த ஒயினை குடித்து சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.1,900 ஆகும்.இந்த நிகழ்வு ஊழியர்கள் மட்டுமின்றி குடிமகன்களையும் கோபபடுத்தியுள்ளது.
இந்த ஊரடங்கில் அந்த எலிகள் போதை ஏறி புத்தி மாறி போய் கும்மாளமிட்டுள்ளன