பொல்லார்ட் தலைமையில் பொலந்து கட்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி

Cricket Kieron Pollard T20 World Cup Windies
By Thahir Sep 11, 2021 03:45 AM GMT
Report

அடுத்த மாதம் 17ம் தேதி தொடர் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார்.

பொல்லார்ட் தலைமையில் பொலந்து கட்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி | Windies Cricket Kieron Pollard T20 World Cup

அவர் கடைசியாக 2015-ம் ஆண்டில் அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

பொல்லார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், பாபியன் ஆலன், வெய்ன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே பிளட்செர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மயர், இவின் லீவிஸ், ஒபெட் மெக்காய், ரவி ராம்பால், ஆந்த்ரே ரஸ்செல், சிம்மன்ஸ், ஒஷானே தாமஸ், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.