’முதல்வர் 2021’ தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது. 2016-ல் நூலிழையில் தவர விட்ட ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் திமுக இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியே இருந்து வருகிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் சீமான் வரிசையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் களம் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சி, தமிழக அரசியல் நிலவரம், தமிழகம் அடுத்து பயணிக்க வேண்டிய பாதை ஆகியவை பற்றி எதிரும் புதிருமாக உள்ள பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேருக்கு நேர் விவாதிக்கும் ’முதல்வர் 2021’ நிகழ்ச்சி ஐபிசி தமிழ் பிரத்யேகமாக வழங்குகிறது.