வெல்லப் போவது நானல்ல- நடிகர் கமல்ஹாசன் ட்வீட்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் சில வாரங்களே மீதம் உள்ள நிலையில் அரசியல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக, திமுக தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் படிப்படியாக பட்டியலை வெளியிட்டு வருகிறது. கமல்ஹாசன் கோயம்பத்தூர் தெற்கில் போட்டியிடுகிறார். ஆலந்தூரில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், “மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.” என்றுள்ளார்.