விம்பிள்டன் டென்னிஸில் தோல்வியடைந்த பிரபல வீரர்கள்

Wimbledon tennis
By Petchi Avudaiappan Jun 29, 2021 05:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், 10-ம் நிலை வீராங்கனையுமான பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) 3-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

இன்னொரு ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.