விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி: ஜோகோவிச்- பெரெட்டினி இன்று மோதல்

Wimbledon tennis Novak Djokovic vs Berrettini
By Petchi Avudaiappan Jul 11, 2021 11:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பயின் ஜோகோவிச், இத்தாலி வீரர் பெரெட்டினி இன்று மோதுகின்றனர்.

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார்.

அதேசமயம் விம்பிள்டன் தொடரின் வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு ஒரு பெண் நடுவராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.