விம்பிள்டன் டென்னிஸில் 2-வது சுற்றுக்கு தகுதிப் பெற்ற பெடரர், மெட்வதேவ்

Wimbledon tennis Rojar federar
By Petchi Avudaiappan Jun 30, 2021 11:00 AM GMT
Report

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பெடரர், மெட்வதேவ் 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். 

லண்டனில்நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.

இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டில் மனாரினோ காயத்தால் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் நடந்த மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் மெட்வதேவ், ஜெர்மனியின் சுவரேவ், பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.