டி20 உலகக்கோப்பையில் வில்லியம்சன் இல்லை - பயிற்சியாளர் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்
டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு சில போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார் என அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது.அடுத்ததாக சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
இதனிடையே முழங்கையில் ஏற்பட்டுள்ள தொந்தரவு காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சில போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், வில்லியம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருந்தார். அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக கடைசி லீக் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
வில்லியம்சன் பந்தை ஹிட் செய்வதில் அற்புதமான திறன் படைத்தவர். அதை செய்ய அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவு தான் எனவும் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
