தினகரனின் முடிவு அதிமுகவிற்கு சாதகமா? ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு செல்வாரா?
டிடிவி தினகரனின் முடிவு அதிமுகவிற்கு சாதகமா?ஓபிஎஸ் எங்கு செல்வார் என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசியுள்ளார்.
தினகரனின் முடிவு அதிமுகவிற்கு சாதகமா?
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதேபோல், அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது வரை கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.
மேலும், சசிகலாவும் கூட்டணி குறித்து நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, சசிகலா அரசியலில் வீழ்ந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதால், அதிமுக 13% வாக்குகளை இழந்தது. ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, அதிமுக எந்த தொகுதியிலும் 3வது இடத்திற்கு செல்லவில்லை.

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு இருந்த ஆதரவு, தற்போது கூட்டணியில் இணைந்துள்ள தினகரனுக்கு இல்லை. தென் மாவட்டங்களில் அதிமுக பல தொகுதிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. முக்குலத்தோர் சமூக வாக்குகளை சீமான் அறுவடை செய்துள்ளார் என பேசியுள்ளார்.
மேலும், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க சம்மதம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க ஏன் மறுத்துள்ளார் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க