ஊரடங்கு தொடருமா..? முதல்வர் நாளை ஆலோசனை!
ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகமுதல்வர் நாளை ஆலோசனை மேற்க்கொள்ள உள்ளார்
தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்
. ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் குறித்தும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.