அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பா...ஐபிஎல் போட்டி நடைபெறுமா?
ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதி போட்டிநேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மழையால் போட்டி தேதி மாற்றம்
அதன் படி இறுதி போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என இருந்த நிலையில் மழை நேற்று குறுக்கிட்டது.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டி தடைபட்டது. இதையடுத்து போட்டி இன்று (29.05.2023) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று மழை பெய்யுமா?
அதன் படி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த இன்று அகமதாபாத்தில் 10 சதவீதம் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.