ரகுமான் சார தப்பா சொல்லாதீங்க...எல்லாமே எங்களோட தப்பு தான்...ACTC CEO...!!
நடைபெற்ற முடிந்த ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனைத்து வித இடஞ்சல்களுக்கும் தாங்களே பொறுப்பேற்பதாக ACTC நிறுவனத்தின் நிறுவனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்
ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி பல்வேறு குளறுபடிகள் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து காவல்துறையினரும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக பலரும் தங்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டதாக கருத்துக்களை கூறியது பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் சந்தித்த இந்த இன்னல்களுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் தெரிவித்திருந்தார்.
நாங்களே பொறுப்பு
இருப்பினும் அவர் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தான், தற்போது அது குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனத்தின் நிறுவனர் ஹேமந்த் தனது மன்னிப்பை கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த இடஞ்சல்களுக்கும் ஏஆர் ரகுமானுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என தெளிவுப்படுத்தி, இதில் ஏஆர் ரகுமானை குற்றம்சாட்ட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிச்சயமாக ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு பணம் திரும்பி அளிக்கப்படும் என உறுதியளித்த அவர், இந்த குளறுபடிகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பேற்று கொள்வது அந்த வீடியோவிலும் அவர் மன்னிப்பு கோரினார்.